TNPSC: போட்டித் தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; விபரங்கள் உள்ளே..!
போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள் இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள் இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்களும் இளைஞிகளும் தமிழ்நாடு அரசு சார்பிலும் இந்திய அரசு சார்பிலும் நடத்தபடும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு அரசு வேலை பெற படித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் முகாம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் இம்முறை புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணபங்கள் இன்று முதல் பெறப்படுகிறது. www.cevilservicecoaching.com இல் இன்று முதல் இம்மாதம் இறுதி வரை அதாவது மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரங்கள்
இதில் டி.என்.பி.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுக்கு தயாராகிவருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படுவதால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும், பழைய வ்ண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், நந்தனம் ஆடவர் கல்லூரியில் 300 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த அறிவிப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.