Job Alerts : டிகிரி படித்தவர்கள் கவனத்திற்கு.. மாவட்ட சுகாதார நிலையத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Job Alerts : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு பணிப்புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor)
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்யூட்டர் பயன்படுத்துவதில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்:
மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாதங்கள் மட்டுமே ஒப்பந்தம் தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளுக்குட்பட்டு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க..
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
விண்ணப்பிப்பது எப்படி?
சுய கையொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் நகல், சாதி சான்றிதழ் நகல், ஓட்டுநர் உரிமம் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று. கையொப்பமிட்ட விண்ணப்பக் கடிதத்தை வரும் 16.03.2023 தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மாவட்ட காசநோய் மையம் அலுவலகத்திற்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
Executive Secretary,
District Welfare Society and
Office of the Deputy Director of Health Services,
Old Hospital Complex, Netty Welkkara Street, Tiruvarur-610001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:16.03.2023
https://drive.google.com/file/d/1-kAjXrH-bl4o_hitygWrKlfgVoUIPKo3/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரங்களை காணலாம்.
மேலும் வாசிக்க..
இதையும் படிங்க..