சமூக நலத்துறை வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு! ரூ. 18,000 சம்பளம்... உடனே விண்ணப்பியுங்கள்!
மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் மற்றும் தரவு நுழைவு பணியாளர் வேலை வாய்ப்பு.

திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு உள்ளது, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் வள்ளியூர் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) இயங்கி வருகின்றது.
திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் மற்றும் தரவு நுழைவு பணியாளர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வழக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப்பணி அல்லது உளவியல், சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
ஊதியம் : ரூ. 18,000
தரவு நுழைவு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/06/2025061972.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 30.06.2025 தேதிக்குள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம். முகவரிக்கு அனுப்ப வேண்டும்





















