EMRS Recruitment 2023: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணி; விண்ணப்பிக்க நாளையே கடைசி
EMRS Recruitment 2023: " இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால் இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும். "
2023-2024 ஆம் ஆண்டிற்கு குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு தொகுப்பூதிய ஆசிரியர்கள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (17.08.2023) கடைசியாகும்.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ( Eklavya Model Residential Higher Secondary School )
செங்கல்பட்டு ( Chengalpattu Jobs ) : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் வட்டம் குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளியில் ( Eklavya Model Residential Higher Secondary School ) கீழே குறிப்பிட்டுள்ள காலியாக உள்ள பட்டதாரி/ முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி விவரம்:
வேதியியல்
கணிதம்
ஆங்கிலம்
காப்பாளர்
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. எம்.ஏ. பி.எட். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்னென்ன ?
- இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.15,000/- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.18,000/- மற்றும் காப்பாளர்களுக்கு மாதம்.ரூ.12,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
- இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால் இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும்.
- மேற்படி காலிப்பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் இல்லாதபட்சத்தில், பட்டியல் இனத்தவர்களும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
மேற்கண்ட தற்காலிக பணிகளுக்கு பள்ளி அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.08.2023 அன்று மாலை 5.00 வரை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Vaasan Nagar,
Melakottaiyur,
Tamil Nadu 600127
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ERCR0NkogChgHoOMn99fOcmqbtSsBbJt/preview என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.
*******
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) 1,876பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (16.08.2023 ) கடைசியாகும்.
பணி விவரம்:
எல்லை பாதுகாப்பு படை,மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை , இந்தோ - திபெத் எல்லை போலீஸ் , சாஸ்த்ரா சீமா பால், டெல்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sub-Inspector (Exe.) in Delhi Police-Male -109
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female -53
Sub-Inspector (GD) in CAPFs -1714
மொத்த பணியிடங்கள் - 1876
ஊதியம்:
ரூ.35, 400 முதல் ரூ.1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
இளநிலைப் படிப்பில் எதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
01.08.2023 தேதியின் அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் சலுகை உள்ளது. முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு மையம்:
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், ஆகிய மாவட்ட மற்றும் புதுச்சேரியில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது:
www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2023
மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1CD3QhRvj6oGRxFKkzPBD8NqTkEbKp45L/view- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர்.