Village Panchayat Secretary: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; 1400+ கிராம ஊராட்சி செயலர் காலியிடங்கள்; ரூ.50,400 ஊதியம்- விண்ணப்பிப்பது எப்படி?
Village Panchayat Secretary Recruitment 2025: தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் தெரிந்த தகுதியான நபர்கள், கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் தெரிந்த தகுதியான நபர்கள், கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப் பணியிடங்கள் - 1483
ஊதியம்- Level 2 (ரூ.15,900 – ரூ.50,400)
கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
வயது (01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு)
பொதுப்பிரிவு - 18 முதல் 32 வரை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /சீர் மரபினர் - 18 முதல் 34 வரை
ஆதி திராவிடர் /ஆதி திராவிடர் (அருந்ததியர்) பட்டியல் பழங்குடியினர் (ம) ஆதரவற்ற விதவை - 18 முதல் 37 வரை
மாற்றுத்திறனாளிகள் - அதிகபட்ச வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு) - 18 முதல் 50 வரை
விண்ணப்பக் கட்டணம்
ரூ.100/- (பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
ரூ. 50/- (ஆதிதிராவிடர் /பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்)
இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - 09.11.2025
நிபந்தனைகள்
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இன சுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
மேற்படி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் இதோ!
நவம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர், 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பயிற்சி) ஆகியோர் அடங்கிய குழு நேர்காணல் நடத்தும்.
தொடர்ந்து, டிசம்பர் 16-ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு, 17-ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக காலி பணியிடங்களை அறிந்துகொள்ள https://tnrd.tn.gov.in/project/Recruitment_Report/ps_communal_category_wise_vacancy_details_roaster.php என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதேபோல மாவட்ட வாரியாக அரசு சார்பில் வெளியிட்ட விளம்பர அறிவிக்கையை https://tnrd.tn.gov.in/project/recruitment/Advertisement_ps/advertisement_display.php என்ற இணைப்பில் காணலாம்.






















