மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு: டிச.27 விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் கல்வி, தொழில்நுட்பத்தில் வளர்ச்சிப் பெற வேண்டும் என்பதற்காகவும், இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் செயல்பட்டுவருகிறது. இவ்வாணையத்தின் மூலம் அனைத்து வகை மாற்றுத்தினாளிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்குவது, சிறப்புக்கல்வி வழங்குவதல், மறுவாழ்வுப் பணிகளுக்கான நிபுணர்களை ஆயுத்தம் செய்தல் மற்றும் தயார்படுத்துதல், கல்வி மற்றும் சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மேம்பாடு அடையச்செய்தல், சமூகத்தில் தடைகளற்ற சூழ்நிலையை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்ள அனைத்து மாற்றுத்தினாளிகளும் இவ்வாணையத்தின் கீழ் பலனடைந்துவருதும் நிலையில் இதனை நிர்வகிக்க பல்வேறு துறைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது program manager, program officer, assistants போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கானத் தகுதிகள் என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் பல்வேறு பணிகளுக்கானத் தகுதிகள்
பணிகள் மற்றும் காலிப்பணியிடங்களின் விபரங்கள்:
Program Manager – 6
Programe officer – 12
Data Analyst – 4
Procurement office – 1
Senior Accountant – 1
Typist cum computer operator – 2
Office assistant – 1
கல்வித்தகுதி :
மேற்கண்ட ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முதல் முதுநிலைப்பட்டதாரிகள் வரை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், உங்களுடைய சுய விபரங்கள் மற்றும் கல்வித்தகுதிக்குறித்த விண்ணப்படிவத்தை மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வாயிலாக வருகின்ற டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி :
Recruitment.tnpwdrights@gmail.com
அஞ்சல் முகவரி:
Project Director- RIGHTS Project cum Director,
Directorate for welfare of the different Abled,
NO.5 Kamarajar salai,
Lady Willingdon College Campus,
Chennai – 600005.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக program office – 15, Assistants- 5, DE0 -5 ஆகிய பணிகள் மாநில அளவில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை www.scd.tn.gov.in என்ற இணையதளப்பக்கத்தின் முழுமையாகத்தெரிந்துக்கொள்ளலாம்.