TMB Recruitment: பணி ஓய்வு பெற்றவரா? பிரபல வங்கியில் வேலை - முழு விவரம்!
TMB Recruitment: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் டிசம்பர் 12- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டுவருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டிஎம்பி வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது.
ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
ஆய்வாளர் - Inspector
தகுதிகள் என்னென்ன?
இதற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மெர்க்கன்டைல் அல்லது பிற வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
ஓய்வு பெறும் வங்கிப் பணியில் scale II, Scale III or Scale IV cadre என்ற பிரிவில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
விருப்ப ஓய்வு (Voluntary Retirement Scheme) பெற்றவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு விவரம்
30.06.2023 -ன் படி 61 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணிகாலம்
இது இரண்டு ஆண்டுகால பணி.
ஊதிய விவரம்
இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் மாத ஊதியமாக ரூ.35,000/- ஆக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்ல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட ஆர்வமும், தகுதியும் உள்ளநபர்கள், https://www.tmbnet.in/tmb_careers -என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னதாக என்னென்ன விபரங்கள் கேட்டுள்ளனர், தகுதி போன்றவற்றை முழுமையாக படித்துத்தெரிந்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்படிவத்தில் எந்த தவறும் இல்லாமல், என்னென்ன ஆவணங்கள் கேட்டுள்ளார்களோ? அவை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.12.2023
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் (Navodaya Vidyalaya Samiti School) காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
துணை ஆணையர் ( Deputy Commisioner - Finance)
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளியில் Deputation முறையில் பணிசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுகிறது. நிதி துறையில் துணை ஆணையர் பணியிடம் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய / மாநில / Statuary / Autonomous நிறுவனங்களில் Pay Level -12 ல் ஊதியம் வாங்குபவர்கள், 5 ஆண்டுகள் 11- லெவல் ஊதியம் வாங்குபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
15,டிசம்பர், 2023-ன் படி, விண்ணப்பத்தாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது மூன்றாண்டு கால பணியாகும். (தேவையெனில்)
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.78,800- ரூ. 2,09,200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இ-மெயில் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Deputy Commissioner Admin,
Navodaya Vidyalaya Samiti,
B-15,Institutional Area, Sector-62,
Noida
Gautam Budh Nagar (U.P.) - 201309
இ-மெயில் முகவரி - applications.nvs@gmail.com
இந்த வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களுக்கு https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/# - என்ற இணைப்பி க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.