மேலும் அறிய

SSC CGL 2023: எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?

SSC CGL 2023: மத்திய பணியாளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பன்முகப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

 மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

எஸ்.எஸ்.சி வேலைவாய்ப்பு:

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலியாக உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) பணிக்கான 7500 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மையங்கள்:

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 07 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 03 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம்  Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு:

8-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். 

CGL ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை:

SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/SC/ST/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்..? 

  • அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in க்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) பதிவு இணைப்பை கிளிக் செய்யவும்
  • போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும்
  • ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும்

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு மெய்நிகர் அரசின் கற்றல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் மற்றும் பயிற்சித் துறையின்- https://tamilnaducareerservices.tn.gov.in/ -பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விணையதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற YouTube Channel-offlov பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கொ. வீர ராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget