SDAT Recruitment: விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை; விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி..
SDAT Recruitment: சர்வதேச விளையாட்டு வீரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி காணலாம்.
SDAT Recruitment: சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (31.10.2023) கடைசி தேதி.
பராமரிப்பு பணிகள் காரணமாக இதற்கு விண்ணப்பிக்க தேவையான அதிகாரப்பூர்வ இணையதளம் நாளை காலை 11 மணிக்குதான் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதிநாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில், சர்வர் பிஸியாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தை இங்கே காணலாம். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2018 ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை 10சி ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF -ன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 10சி -ல் அங்கீகரிக்கப்பட ISF கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்...
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரம்
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அனைத்து தகுதிகளுடன், 40 வயதிற்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,.
இதற்கு இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.10.2023 மாலை 5 மணி வரை
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
B.Tech/B.E./B.Sc/BCA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஊதிய விவரம்
இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.11.2023
இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Technician%20and%20Project%20associate%20-%20Advt-180.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.