Job Alert: வெளியான சூப்பர் அறிவிப்பு;நகராட்சி,மாநகராட்சி வேலை; பணியிடங்கள் அதிகரிப்பு- முழு விவரம்
நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 2,104பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 1933 -லிருந்து 2104 உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கு என்னென்ன தகுதிகள் என்று காணலாம்.
பணி விவரம்
- உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) -194
- உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) -145
- உதவிப்பொறியாளர் (நகராட்சி)- 80
- உதவிப்பொறியாளர் (சிவில்) -58
- உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) -14
- உதவிப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) -71
- உதவிப்பொறியாளர் (திட்டம் மாநகராட்சி) - 156
- நகரமைப்பு அலுவலர் (நிலை 12) - 12
- இளநிலை பொறியாளர் - 24
- தொழில்நுட்ப உதவியாளர் - 257
- வரைவாளர் (மாநகராட்சி) -46
- வரைவாளர் (நகராட்சி) -130
- பணி மேற்பார்வையாளர் -92
- நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) -102
- பணி ஆய்வாளர் - 367
- துப்புரவு ஆய்வாளர் -356
மொத்த பணியிடங்கள் - 2104
ஊதிய விவரம்
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
http://www.tnmaws.ucanapply.com/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கா கல்வி உள்ளிட்ட் பிற தகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டும்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2024
விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in - என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.
மேலும் வாசிக்க..
Education Loan Mela : விழுப்புரத்தில் நாளை மாபெரும் கல்விக்கடன் முகாம் - முழுவிவரம் உள்ளே