(Source: ECI/ABP News/ABP Majha)
SSC JHT Recruitment 2024: இந்தி மொழியில் பட்டம் பெற்றவரா?மத்திய அரசுப் பணி- விண்ணப்பிக்க நாளையே கடைசி!
SSC JHT Recruitment 2024: Sமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்ட 312 இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (26.08.2024) கடைசி.
பணி விவரம்:
- ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி
- ஜூனியர் இந்திய மொழிபெயர்ப்பாளர்
- சீனியர் இந்திய மொழிபெயர்ப்பாளர்
Central Secretariat Official Language Service (CSOLS), Armed Forces Headquarters (AFHQ), மத்திய அரசு துறைகள், அமைச்சக அலுவலகங்கள் உள்ளிட்டற்றில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இது.
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், இந்தி ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, இரண்டு ஆண்டுகள் மொழிபெயர்ப்பு பணியில் அனுபவம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சீனியர் மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், இந்தி ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, மூன்று ஆண்டுகள் மொழிபெயர்ப்பு பணியில் அனுபவத்துடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி - Level-6 (ரூ.35400- 112400)
- ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - Level-6 (ரூ.35400- 112400)
- சீனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - Level-7 (ரூ.44900- 142400)
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் திறனறிவுத் தேர்வு (மொழிபெயர்ப்பு செய்தல்) ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ -என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.100, கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர் மற்றும் பெண்கள்,முன்னாள் இராணுவ பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CHTE_2024_08_02.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 26.08.2024 23:00 மணி வரை
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி - 26.08.2024 - 05.09.2024 (23:00 மணி வரை)
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் - அக்டோபர் - நவம்பர், 2024