மேலும் அறிய

SSC MTS 2023: அம்மாடியோவ்..11 ஆயிரம் மத்திய அரசு காலிப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளையே கடைசி- விவரம்

மத்திய அரசின்கீழ் எம்டிஎஸ் பணிகளுக்கான 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளை (பிப்.24) கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசின்கீழ் எம்டிஎஸ் பணிகளுக்கான 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளை (பிப்.24) கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

பிப்ரவரி 24 கடைசித் தேதி

இந்த நிலையில், எஸ்எஸ்சி எம்டிஎஸ் (Multi Tasking Staff) தேர்வு மற்றும் ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதிக்கு ஆளாகினர். எஸ்எஸ்சி எனப்படும் மத்திய ஆட்சேர்ப்பு வாரிய இணையதளத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

இதையடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் தேர்வர்கள் நாளை (பிப்.24) வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம்.

SSC Website Down Staff Selection Commission MTS Recruitment 2023 Candidates Suffer as website crashes SSC Website Down: 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள்; எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சி!

விண்ணப்பப் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள மார்ச் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

காலிப் பணியிடங்கள்

பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள்
ஹவில்தார் - 529 பணியிடங்கள்

மொத்தம் - 11,409 பணியிடங்கள்

தமிழிலும் எழுத அனுமதி

எம்டிஎஸ் தேர்வில், கடந்த 2021ஆம் ஆண்டு விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது. 

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்யவும். 

* முகப்புப் பக்கத்தில் Apply க்ளிக் செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.

* அதில் தோன்றும் "Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022" என்ற பக்கத்தைச் சொடுக்கவும். 

* லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget