SSC GD Recruitment: 39,481 பணியிடங்கள், ரூ.69 ஆயிரம் ஊதியம்: எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SSC GD Recruitment 2024: தேர்வர்கள் இதற்கு அக்டோபர் 14ஆம் வகுப்பு வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
2024 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள் (பொது வேலை), எஸ்எஸ்எஃப் மற்றும் ரைஃபிள் மேன் (பொது வேலை) உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை எஸ் எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் இதற்கு அக்டோபர் 14ஆம் வகுப்பு வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான போட்டித் தேர்வு 2025ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படலாம். கணினி வழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் 13 பிராந்திய மொழிகளில், தேர்வு நடைபெறும். அதாவது, தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
காலி இடங்கள் எத்தனை?
பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் ஆண்களுக்கு 13306 காலி இடங்களும் பெண்களுக்கு 2348 இடங்களும் என, மொத்தம் 15,654 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிஐஎஸ்எஃப் பிரிவில், 7,145 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் பிரிவில் 11541 காலி இடங்களும் எஸ்எஸ்பி பிரிவில் 819 காலி இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITBP துறையில் 3017 இடங்களும் AR துறையில் 1248 இடங்களும் SSF பிரிவில் 35 இடங்களும் என்சிபி-ல் 22 இடங்களும் உள்ளன. ஆக மொத்தம் 39481 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்
Level -1 வகை பணிகளுக்கு – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
Level - 3 வகை பணிகளுக்கு - ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://ssc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் https://ssc.gov.in/login என்ற பக்கத்தில் லாகின் செய்ய வேண்டும்.
* முன்பதிவு செய்யாத நபர்கள், https://ssc.gov.in/candidate-portal/one-time-registration/home-page என்ற இணைப்பை க்ளிக் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டியது அவசியம்.
* தொடர்ந்து போதிய விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை, பாடத்திட்டம், வயது வரம்பு, சாதி வாரியான ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை முழுமையாக அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/