Southern Railway Recruitment:ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவரா?தெற்கு ரயில்வேயில் பணி - விண்ணப்பிப்பது எப்படி?
Southern Railway Recruitment: தெற்கு ரயில்வேயில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
தெற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, பாலக்காடு, திருவனந்ததபுரம், சேலம் உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களில் உள்ள அலுவலகங்களில் Scouts & Guides இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி
- இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னிக்கல் பிரிவு வேலைக்கு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- லெவல் -1 பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 38 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
ஊதிய விவரம்
எழுத்துத் தேர்வு விவரம்
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://iroams.com/rrc_sr_scout/pdfs/400_477831.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20,2024
பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வேலை
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
மூத்த ஆலோசகர் (Senior Counsellor)
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
கல்வித் தகுதி
- அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும்.
- 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் தொடர்பான அழைப்பு உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராக வேண்டும்.
- தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மூத்த அலோசகர் - ரூ.20,000/-
பல்நோக்கு உதவியாளர் - ரூ.6,400/-
வயது வரம்பு:
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை,
சென்னை - 01
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.02.2024