மேலும் அறிய

SBI PO Recruitment:600 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

SBI PO Recruitment Notification 2024-25: எஸ்.பி.ஐ. வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவலை காணலாம்.

நாட்டின் பிரபல பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

ப்ரோபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) 

மொத்தப் பணியிடங்கள்- 600

SBI PO Recruitment:600 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30.04.2025 -ன் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 6-வது செமஸ்டர் தேர்வு எழுதியவர்கள் / எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 30.04.2025-க்குள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். Integrated Dual Degree (IDD) சான்றிதழும் இணைக்க வேண்டும். பொறியியல், மருத்துவம் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Chartered Accountant, Cost Accountant படித்தவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

முதல்நிலை தேர்வு:

SBI PO Recruitment:600 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

முதன்மை தேர்வு:

SBI PO Recruitment:600 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

இறுதித் தேர்வு:

SBI PO Recruitment:600 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

எழுத்துத் தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா?

எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://sbi.co.in/web/careers/current-openings  / https://sbi.co.in/web/careers

கவனிக்க :

ஆன்லைன் பதிவு செய்தல்: 27.12.2024 முதல் 16.01. 2025 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். 

தேர்வுக்கான பயிற்சி : பிப்ரவரி, 2025

முதல்நிலை எழுத்துத் தேர்வு: 08.03.2025 / 15.03.2025

 முதன்மை எழுத்துத் தேர்வு : ஏப்ரல் / மே 2025

திறனறிவுத் தேர்வு: 2025 மே/ ஜூன்

நேர்காணல் : 2025 மே / ஜூன் 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் -  மே/ ஜூன் 2025 

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்:

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது. (ரூ.48,480-2,000/7-62,480-2340/2-67,160-2680/7-85,920) 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 16.01.2025

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://sbi.co.in/web/careers/current-openings - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம். 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget