SBI PO Recruitment 2021: எஸ்பிஐ வங்கியில் 2,056 வேலைகள் - உடனே விண்ணப்பிங்கள்..!
SBI PO Recruitment 2021: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் 27627 ரூபாய் ஊதியம் அளிக்கப்படும். பட்டயக் கணக்காளர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
SBI PO Recruitment: 2021-ம் ஆண்டுக்கான பிரோபஷனரி ஆபிசர் பணிக்கான 2,056 காலி பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்பிஐ வங்கி அறிவி்த்துள்ளது.
வங்கித் தேர்வுக்கு முயற்சித்து வருபவரா நீங்கள். உங்களுக்குதான் இந்தத் தகவல். எஸ்.பி.ஐ வங்கி 2,056 பிரோபஷனரி ஆபிசர் (பி.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் பணிக்கு இன்று அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான மத்திய அரசின் மூலம் சான்றளிக்கப்பட்ட ஏதேனும் ஓர் படிப்பைப் படித்திருக்க வேண்டும்.
பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விதிமுறைகளுக்கு உள்பட்டு இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணலுக்கு அழைக்கும்போது 2021 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பாக இறுதித் தேர்வு எழுதியதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை திருத்துவதற்கான கடைசி தேதியும் அக்டோபர் 25-ஆம் தேதிதான். 25-ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்தியிக்க வேண்டும். நவம்பர் 9-ஆம் தேதி வரை விண்ணப்பத்தை பிரின்ட் எடுக்கலாம்.
21 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 2.4.1994 முதல் 1.4.2000 ஆண்டுகளுக்கு இடைபட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த தேதிக்கு முன்னரோ, பின்னரோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் 27627 ரூபாய் ஊதியம் அளிக்கப்படும். பட்டயக் கணக்காளர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதல்கட்டத் தேர்வு 2021 ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும்.
நேர்காணல் பிப்ரவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும். தேர்வு முடிவுகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு sbi.co.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் பார்க்க:-