RRB: இந்திய ரயில்வேயில் 5800+ வேலைவாய்ப்புகள்; பட்டப் படிப்பு போதும்- உடனே விண்ணப்பிங்க! இதோ விவரம்!
ஆர்ஆர்பி பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரயில்வேயில் தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர், நிலைய மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட 5,810 காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 20ஆம் தேதி கடைசி ஆகும்.
என்னென்ன பணி இடங்கள்?
தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர், நிலைய மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர், தட்டச்சர், மூத்த எழுத்தர் - தட்டச்சர் & போக்குவரத்து உதவியாளர், மூத்த எழுத்தர் - தட்டச்சர் & போக்குவரத்து உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எவ்வளவு பணியிடங்கள்?
தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர் - 161 பதவிகள்
நிலைய மாஸ்டர் - 615 பதவிகள்
சரக்கு ரயில் மேலாளர் - 3416 பதவிகள்
இளநிலை கணக்கு உதவியாளர் - தட்டச்சர் - 921 பதவிகள்
சீனியர் எழுத்தர் - தட்டச்சர் - 638 பதவிகள்
போக்குவரத்து உதவியாளர் - 59 பதவிகள்
கல்வித் தகுதி
தலைமை வணிகம் - டிக்கெட் மேற்பார்வையாளர் - எந்த பட்டதாரியாக இருந்தாலும் போதும்
நிலைய மாஸ்டர் - பட்டதாரி
சரக்கு ரயில் மேலாளர் - பட்டதாரி
இளநிலை கணக்கு உதவியாளர், தட்டச்சர் - பட்டதாரி + கணினியில் ஆங்கிலம் / இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
சீனியர் எழுத்தர் - தட்டச்சர் - எந்த பட்டதாரி + கணினியில் ஆங்கிலம் / இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
போக்குவரத்து உதவியாளர் - பட்டதாரி
RRB-க்கான வயது வரம்பு: (20.11.2025 நிலவரப்படி)
அனைத்து பதவிகளுக்கும்- 18 முதல் 33 வயது வரை
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: +5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு: +3 ஆண்டுகள்
PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: +10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: +15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: +13 ஆண்டுகள்
ஊதியம் எவ்வளவு?
தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர் - ரூ.35,400/-
நிலைய மாஸ்டர் - ரூ.35,400/-
சரக்கு ரயில் மேலாளர் - ரூ.29,200/-
இளநிலை கணக்கு உதவியாளர் - தட்டச்சர் - ரூ.29,200/-
சீனியர் எழுத்தர் - தட்டச்சர் - ரூ.29,200/-
போக்குவரத்து உதவியாளர் - ரூ.25,500/-
தேர்வு முறை எப்படி?
முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
தட்டச்சு திறன் தேர்வு/ CBAT (பொருந்தக்கூடியது)
ஆவண சரிபார்ப்பு (DC)/ மருத்துவ தேர்வு (ME)
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
PwBD/SC/ST/பெண்/EBC-ரூ.250/- (ரூ.250/- திரும்பப் பெறலாம்)
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500/- (ரூ.400திரும்பப் பெறக்கூடியது)
கட்டண முறை: ஆன்லைன் மூலம் நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிக்கையை https://www.rrbcdg.gov.in/uploads/2025/06-NTPCG/062025NTPCG-CEN.pdf என்ற இணைப்பில் காணலாம்.






















