மேலும் அறிய

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி: 190 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

புதுச்சேரி, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது – கல்வித் துறை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு ஆரம்ப பள்ளிகளில் 190 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பு அறிவிப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.,

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகி ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 190 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் பி.எஸ்.டி. (Primary School Teacher)  பதவிக்காக நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 2025ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 14 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து,  அக்டோபர் 27 மாலை 5:00 மணிக்குள், பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in] (https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மட்டும்  181 பணியிடங்கள்  உள்ளன. இதில், பொதுப் பிரிவுக்கு 72 இடங்கள், எம்.பி.சி.க்கு 32, எஸ்.சி.க்கு 28, ஓ.பி.சி.க்கு 20, இடபுள்யூ.எஸ்.க்கு 3, முஸ்லீம் பிரிவுக்கு 4, பி.டி.க்கு 2 மற்றும் எஸ்.டி.க்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக உள் ஒதுக்கீடாக 9 இடங்கள் பதிலளிக்கப்பட்டுள்ளன. மாகி பிராந்தியத்தில் 9 பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப் பிரிவு – 3, எஸ்.சி. – 2 மற்றும் எஸ்.டி. – 4 இடங்கள் உள்ளன. இங்கு மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு உள் ஒதுக்கீடு இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள்  பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்  பெற்றிருக்க வேண்டும். அதோடு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட  இரண்டு ஆண்டு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி  படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பாடமாக தமிழ் அல்லது மலையாளம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அந்தந்த பிராந்திய மொழிகளில் அடிப்படை ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) பெற்றுள்ள மதிப்பெண்களும் இந்த வேலைக்கு தகுதி அளிக்க பயன்படுத்தப்படும். பொதுப் பிரிவு மற்றும் இடபுள்யூ.எஸ். பிரிவினர்  60% (90 மதிப்பெண்) , ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர் மற்றும் முஸ்லீம் பிரிவினர்  55% (82 மதிப்பெண்) , எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்  50% (75 மதிப்பெண்)  எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பும்

இந்த பணியிடங்களுக்கு பொதுவாக 18 முதல் 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். ஆனால் சில பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.சி., ஓ.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி. பிரிவினர் – 3 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி. – 5 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகள் – பொதுப் பிரிவுக்கு 10 ஆண்டுகள், ஓ.பி.சி. மற்றும் மத்தியசார்ந்த பிரிவினருக்கு 13 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

இப்பணியிடங்களை எதிர்நோக்கும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். அரசு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு மற்றும் நிரந்தர வேலைக்கான நம்பிக்கை இவர்களுக்கு கல்வி துறையில் ஒரு புதிய முன்னேற்ற வாய்ப்பை உருவாக்கும்.

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget