Job Fair: நாளை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு; எங்கே, எப்போது? விவரம்!
Job Fair: நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தில் நாளை (04.11.2023) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்வேலைவாய்ப்பு முகாம் நாளை (04.11.2023 - சனிக்கிழமை) நடைபெறுகிறது.
மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநிலம் முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
நாகர்கோவில், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நாளை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
- இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
- இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
- வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.
நீலகரி வேலைவாய்ப்பு முகாம்
ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
உதகமண்டலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்புகொள்ள 0423 - 2444004, 94 99 05 59 48
கன்னியாகுமரி வேலைவாய்ப்பு முகாம்
மார்த்தாண்டத்தில் உள்ள நேசமனி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம் - 04.11.2023
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம் - காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை
மேலும் வாசிக்க..
Job Alert: மாதம் ரூ.30,000 ஊதியம்; பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!