Jobs: மகளிர் திட்ட அலுவலகத்தில் பணிபுரிய விருப்பமா ? - செங்கல்பட்டு ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கினைப்பாளர் (District Project Co-ordinator) மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் (Cluster Co-ordinator) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சிறப்பு சுய உதவிக் குழுவை உருவாக்கும் புதிய திட்டமான ‘’விடியல்’’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மேம்படுத்த சிறப்பு சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதார மேம்படுத்த மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Project Co-ordinator) மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர்(Cluster Co-ordinator) நியமனம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்னென்ன
அதன்படி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. அடிதட்டு மட்டத்திலுள்ள சமூகத்திற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 வருடங்கள் வரையில் பணியாற்றிய அனுபவம் பெற்ற பட்டதாரியாக அல்லது MSW முடித்தவராக இருக்க வேண்டும். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் சமூகம் தொடர்பான நல்ல தகவல் தொடர்பு மற்றும் விளக்கக்காட்சி திறன் பெற்றவராக இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்துடன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள் இதோ
தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் (Cluster Co-ordinator) பணியிடத்திற்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது நலிவுற்ற குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும், விண்ணப்ப படிவம் 25.08.2023 தேதிக்குள் செங்கல்பட்டு மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்