NIA : தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதைப் படிங்க!
தேசிய ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர், துணை இயக்குநர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 28 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி, ஆர்வமும், பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பேராசிரியர்
துணை இயக்குநர் (DEPUTY DIRECTOR (ADMN.) )
நிர்வான அதிகாரி (ADMINISTRATIVE OFFICER )
உதவி பேராசிரியர் (ASSISTANT PROFESSOR (Rog Nidan & Vikriti Vigyan))
CLINICAL REGISTRAR (Kayachikitsa)
NURSING OFFICER
MEDICAL LABORATORY TECHNOLOGIST
PHARMACIST (AYURVEDA)
JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST
MULTI-TASKING STAFF (MTS)
கல்வித் தகுதி:
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்சம் ஆயுர்வேத மருத்துவம் படித்திருக்க வேண்டும். ஒவ்வோரு பணிக்கும் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக உள்ளவற்றை https://www.nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO._1-2022.PDF அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஊதிய விவரம்:
பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.1,23,100 முதல் ரூ. 2,15,900 வரை வழங்கப்படும்.
துணை இயக்குநர் பணிக்கு மாதம் ரூ.67,700- ரூ. 2,08,700 வரை வழங்கப்பட உள்ளது.
நிர்வாக அதிகாரி பணிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ. 1,77,500 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
உதவி பேராசிரியருக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
CLINICAL REGISTRAR (Kayachikitsa) பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.
NURSING OFFICER பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
MEDICAL LABORATORY TECHNOLOGIST பணிக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.
PHARMACIST (AYURVEDA) பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும்.
JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST பணிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
MULTI-TASKING STAFF (MTS) பணிக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ, 56,900 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 28 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 20.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO._1-2022.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
அதிகாப்பூர்வ வலைதள முகவரி - https://www.nia.nic.in/
மேலும் வாசிக்க..
NIRDPR: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம்