மேலும் அறிய

நாமக்கல் அரசு வேலை: 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 71 காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பிங்க! கடைசி தேதி மிஸ் பண்ணாதீங்க!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வகையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள். நாமக்கல் மாவட்டத்தில் அரசு துறையில்  71 காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வகையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சுகாதாரத்துறையில் உள்ள 71 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பல்நோக்கு பணியாளர், நர்சிங் தெரபிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பிளாக் கணக்கு உதவியாளர், தடுப்பூசி பிரிவு மேனேஜர், தெரபிஸ்ட் உதவியாளர், பல்நோக்கு பணியாளர்கள், ஜூனியர் உதவியாளர், பார்மசிஸ்ட், ஆய்வக டெக்னீஷியன், ஆயுஷ் கன்சல்டண்ட், அட்டண்டர் உள்ளிட்ட பதவிகளில் 71 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அதிகப்படியாக பல்நோக்கு ஊழியர் பதவிக்கு 30 காலிப்பணியிடங்கள், நர்சிங் தெரபிஸ்ட் பதவிக்கு 19 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பிளாக் கணக்கு உதவியாளர் பி.காம் படித்திருக்க வேண்டும். மேலும் Tally அவசியம். 1 பணியிடம் நிரப்பப்படுகிறது. தடுப்பூசி பிரிவு மேனேஜர் பதவிக்கு 1 பணியிடம் உள்ளது. இதற்கு வணிக நிர்வாகம், பொது சுகாதாரம், கணினி பயன்பாடு, சமூக அறிவியல், மெட்டீரியல் மேனேஜமெண்ட், சப்ளே செயின் மேனேஜ்மெண்ட், ஏசி மெக்கானிக் உள்ளிட்டவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தெரபிஸ்ட் உதவியாளர் பதவிக்கு நர்சிங் தெரபி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு 2 பணியிடம், ஆண்களுக்கு 2 பணியிடம் உள்ளன. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழ் நன்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஜூனியர் உதவியாளர் பதவிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் COA முடித்திருக்க வேண்டும்.

நர்சிங் தெரபிஸ்ட் பதவிக்கு 19 பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆயுஷ் நர்சிங் தெரபிஸ்ட் முடித்திருக்க வேண்டும். பார்மசிஸ்ட் பதவிக்கு 3 பணியிடங்கள் உள்ளன. இதற்கு பார்மஸி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.லேப் டெக்னீஷியன் பதவிக்கு 2 பணியிடம் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெடிக்கல் ஆய்வக தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆயுஷ் கல்சல்டன் பதவிக்கு 3 பணியிடங்கள் உள்ளன. இதற்கு BNYS முடித்திருக்க வேண்டும். அட்டண்டர் பதவிக்கு 3 பணியிடம் உள்ள்ன. 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஹோமியோபதி பிரிவில் மருந்தாளுநர் பதவிக்கு பார்மசி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக நிரப்பப்படுவதால், பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ.8,500 முதல் அதிகபடியாக ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தெரபிஸ்ட் உதவியாளர் நர்சிஸ் தெரபிஸ்ட், பார்மசிஸ்ட் ஆகிய பதவிகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://namakkal.nic.in/ என்ற நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைத்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தபால் முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம். தொலைபேசி எண் : 04286 281424.

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025 மாலை 5 மணி வரை. நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பத்துடன் பிறந்த தேதி குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சான்று, 10, 12, டிகிரி, டிப்ளமோ தகுதி மதிப்பெண்கள் சான்றிதழ், டிகிரி சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை, சிறப்பு தேவை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கால தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள். நல்ல பணி வாய்ப்பு நாமக்கல்லில் கிடைத்துள்ளது. இதை தவற விட்டு விடாதீர்கள். இன்னும் சில நாட்களேதான் உள்ளது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
Embed widget