மேலும் அறிய

மீனவ இளைஞர்களுக்கு UPSC கனவை நனவாக்கும் முயற்சி! இலவச பயிற்சி & அரசு வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்.

மயிலாடுதுறை மாவட்ட படித்த பட்டதாரி மீனவ இளைஞர்களுக்கான குடிமைப் பணித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மீனவச் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்தியாவின் உயரிய குடிமைப் பணிகளுக்கான (Civil Services) போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புப் பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் கடலோர மற்றும் உள்நாட்டு மீனவ இளைஞர்களுக்கு, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் (All India Civil Services Coaching Centre, Chennai) மூலம் பிரத்தியேக இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அறிவிப்பும் திட்டச் சிறப்பம்சங்களும்

மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை அமைச்சர் 12.11.2017 அன்று சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தச் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தத் திட்டம் மீனவ இளைஞர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையான அறிவையும், திறன்களையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீனவக் குடும்பங்களில் இருந்து அரசு உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவை நனவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?

இந்த அரிய வாய்ப்பை, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முக்கியத் தகவல்கள்:

* பயிற்சி மையம்: சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்.

* பயிற்சி: குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பிரத்தியேகப் பயிற்சி.

* நோக்கம்: மீனவச் சமூக இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல்.

* தேர்வு: மொத்தம் 20 பேர் (கடல் மற்றும் உள்நாட்டு மீனவ இளைஞர்கள்).

விண்ணப்ப படிவம் மற்றும் வழிமுறைகள்

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விருப்பம் உள்ள தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள், விண்ணப்பப் படிவத்தையும் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் (Guidelines) கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களைப் பெற வேண்டிய அலுவலகங்கள்

* நாகப்பட்டினம் (மண்டலம்): மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகம்.

* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை, மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் (Working Days) நேரில் சென்று விலையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க இறுதி நாள்!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய ஆவணங்களுடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:

 * தேதி: 25.11.2025

 * நேரம்: மாலை 5.00 மணிக்குள்

விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மயிலாடுதுறை (இருப்பு) சீர்காழி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உதவிக்கு 

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளுமாறு மீனவ இளைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தொடர்புக்கான முகவரி:

> உதவி இயக்குநர் அலுவலகம்,

> மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,

> தென்பாதி மெயின் ரோடு, எண்.41/யு,

> பெஸ்ட் பள்ளி எதிரில்,

> சீர்காழி - 609111.

> தொலைபேசி எண்: 04364-271455

தகுதியுள்ள மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget