Jobs Alert : சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா...? எப்படி அப்ளை பண்ணுவது...? முழு விவரம் உள்ளே..
மதுரை மாவட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம் இது.
மதுரை மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்காலிகப் பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22.10.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதிக்கு பிற்கு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
மெக்கானிக் பணி
EDSS- LIMS-IT Co-Ordinator
உதவி கணக்காயர்
PBSK - Pharmacist
உளவியல் ஆலோசகர்
சமூக பணி
கல்வித் தகுதி:
மெக்கானிக் பணிக்கு ஏ.சி. பராமரிப்பு குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஏ.சி. மெக்கானிக் படிப்பில் ஐ.டி.ஐ. டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
EDSS- LIMS-IT Co-Ordinator பணிக்கு எம்.சி.ஏ. பி.இ. அல்லது பி.டெக் படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு கால பணி அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
உதவி கணக்காயர் பணிக்கு பி.காம் படித்திருக்க வேண்டும். Tally நன்கு தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
PBSK - Pharmacist பணிக்கு பி.பார்ம் அல்லது டி, பார்ம் படிப்பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர் பணிக்கு உளவியல் துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சமூக பணி செய்ய சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மாத ஊதிய விவரம்
கல்வித் தகுதி:
மெக்கானிக் பணி - ரூ.20,000
EDSS- LIMS-IT Co-Ordinator- ரூ.16,500
உதவி கணக்காயர் - ரூ.16,000
PBSK - Pharmacist - ரூ.15,000
உளவியல் ஆலோசகர் - ரூ. 23, 000
சமூக பணி - ரூ.23,800
நிபந்தனைகள்:
இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice-category/recruitment என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகலுடன் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
மின்னஞ்சல் முகவரி (E-mail ID) dphmdunic.in.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர்,
சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
விஸ்வநாதபுரம்,
மதுரை மாவட்டம் - 625 014
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/10/2022101364.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..
NIA : தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதைப் படிங்க!