Madras High Court Recruitment 2021: மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை; செப்.13 கடைசி நாள்!
விண்ணப்பிக்கும் நபர்கள், 10 ஆவது 12 ஆவது மற்றும் 3 ஆண்டு இளங்கலை மற்றும் 3 ஆண்டு முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது 10வது 12ம் வகுப்பு மற்றும் 5 ஆண்டு டிகிரி படித்திருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள law clerks பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஏதாவது ஒரு டிகிரியோடு இளங்கலை சட்டம் முடித்தவராக இருந்தால் செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் அனைத்து முக்கிய விஷயங்களையும் முறையாக விவாதித்து சரியானத் தீர்ப்பு வழங்கக்கூடிய இடமாக சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பொதுநல வழக்குகளின் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றம் நல்லத் தீர்வினை வழங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்நீதிமன்றத்தில், பல்வேறுத் துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில், தற்போது 37 law clerks பணியாளர்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்த தகுதிகளை எல்லாம் கொண்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் law clerks பணிக்கானத் தகுதிகள்:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 10 ஆவது 12 ஆவது மற்றும் 3 ஆண்டு இளங்கலை மற்றும் 3 ஆண்டுமுதுகலை பட்டம் பெற்றவர்கள்( 10+2+3+3) அல்லது 10 ஆவது 12 ஆவது ஆம் வகுப்பு மற்றும் 5 ஆண்டு டிகிரி (10+2+5) என முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படித்திருக்க வேண்டும். இதோடு சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றிருப்பதோடு பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களாகவும், 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை www.hcmadras.tn.nic.in என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, முன்அனுபவம் போன்ற அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்வதோடு, சுய சான்றொப்பம் செய்த சான்றிதழ்களை இணைத்து mhclawclerkkrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதோடு அதோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Registrar, General high court, Madras – 600 104 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வின் போது விண்ணப்பத்தார்களுக்கு viva voce நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் law clerks ஆக பணியமர்ததப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூபாய் 30 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கானக் கூடுதல் விபரங்களை www.hcmadras.tn.nic.in அல்லது http://www.hcmadras.tn.nic.in/noft43of2019.pdf என்ற இணையதளப்பக்கத்தில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.