KVB Bank Jobs: கரூர் வைஸ்யா வங்கியில் சேல்ஸ் பிரிவில் வேலை; விண்ணப்பிக்க இங்க செக் பண்ணுங்க..
கரூர் வைஸ்யா வங்கியில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜீன் 30-ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி:
கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியாகும். இந்த வங்கியானது தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
காலிப்பணியிடங்கள்
Sales and Service Associates பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணிகள் : Sales and Service Associates
சம்பளம் :ரூ.15,000 - ரூ.18,000
கல்வித் தகுதி : குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் -21 வயது; அதிகபட்சம் -28 வயது
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2022
விண்ணப்பக் கட்டணம் : கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை : Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிப்பது எப்படி:
- கரூர் வைஸ்யா வங்கியின் இணையதளமான Karur Vysya Bank - KVB-க்கு செல்லவும்.
- Careerஎன்பதை தேர்வு செய்யவும்
- அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- கடைசி தேதியான ஜீன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்; அல்லது லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.The Karur Vysya Bank Ltd.
மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள ABP நாடு வேலைவாய்ப்பு பிரிவை பார்க்கவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்