SBI recruitment 2022: ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஆஃபர்: புதிதாக 641 காலிபணியிடங்கள்.. ! - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட எஸ்பிஐ !
எஸ்பிஐ வங்கியில் புதிதாக 641 பணிகளுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
வங்கிப் பணியிலிருந்து வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்பிஐ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய வாய்ப்பை வழங்க உள்ளது. தற்போது எஸ்பிஐ நிறுவனத்தில் புதிதாக வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஏற்கெனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதன்படி எஸ்பிஐ வங்கியில் ஓய்வு பெற்ற 60 முதல் 63 வயதுடையவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. Channel Manager Facilitator -Anytime Channels, Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) மற்றும் Support Officer- Anytime Channels (SO-AC) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பம் ஏற்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 7 ஆம் தேதி கடைசி நாள் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மொத்த காலிய பணியிடங்கள்: 641 காலி பணியிடங்கள்
விண்ணப்பிக்க தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஒருவர் 60 வயது முதல் 63 வரை இருக்க வேண்டும். மேலும் அவர்கள் எஸ்பிஐ அல்லது மற்ற வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்காக விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.sbi.co.in என்ற தளத்தில் சென்று இந்த பணிக்கான அறிவிப்பாணையை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
Channel manager Facilitator-Anytime Channels (CMF_AC) என்ற பணிக்கு மாத சம்பளம் 36,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) மற்றும் Support Officer- Anytime Channels ஆகிய இரண்டு பணிகளுக்கும் மாத சம்பளம் 41,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.
தேர்வு விவரம்:
இந்த பணிகளுக்கு விண்ணபிக்கம் நபர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதிலிருந்து சிலர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நடைபெறும் நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று எஸ்பிஐ அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை;ரூ. 50,000-க்கு மேல் சம்பளம்.. விண்ணப்பிக்க உடனே செக் பண்ணுங்க..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்