தமிழக வனத்துறையில் இவ்வளவு சூப்பரான வேலையா? உடனே செக் பண்ணி அப்ளை பண்ணுங்க..
தமிழக வனத்துறையில் மாதம் ரூ. 75 ஆயிரம் கிடைக்கும் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவற்றை விவரமாக அறிந்து கொள்வோம்.
தமிழக வனத்துறையில் மாதம் ரூ. 75 ஆயிரம் கிடைக்கும் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவற்றை விவரமாக அறிந்து கொள்வோம்.
மாறிவரும் காலச்சூழலில் நிறைய படிப்புகள் வந்துவிட்டன. அதுவும் வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வானிலை என நிறைய படிப்புகள் வந்துவிட்டன. இளைய சமுதாயமும் அவற்றை தேர்ந்தெடுப்பது வரவேற்கத்தக்கதாக மாறியுள்ளது. அரிதான படிப்புகளுக்கு தேவை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழல் வனத்துறை பணியிடத்திற்கு உருவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்கள் நிரப்ப உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04.06.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன?
தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சட்ட ஆலோசகர் (Legal Advisor) பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master of Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தபட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது,
அதாவது Environment, Forest and Climate Change – சுற்றுச் சூழல் , வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறையில் 5 ஆண்டுகால முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக வனத் துறை அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் வெறும் 2 இடங்களே உள்ளதால் இந்தப் பணிக்கான போட்டி வெகுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களுக்கு என்று எழுத்துத் தேர்வு ஏதுமில்லை. மாறாக நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தகவல்களை பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
Environment, Climate Change and Forest Department, Secretariat, Chennai-9 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 04.06.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.