மேலும் அறிய

Job Alert: டிப்ளமோ நர்சிங் படித்தவரா? மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம்; அரசு மருத்துவமனையில் பணி - முழு விவரம்

Job Alert: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Trauma Registry Assistant

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க நர்சிங் துறையில் பி.எஸ்.சி. அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணி 11 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமானது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இது ஒப்பந்தம் அடிப்படையிலான பணி வாய்ப்பு மட்டுமே. 

உரிய கல்வித்தகுதி உள்ளவர்கள் கல்வி சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மருத்துவமனை அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
தஞ்சாவூர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 24.08.2023

*****

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
 
தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல் படை), இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை இன்று முதல் வரவேற்கிறது. எனினும்  இணையவழி விண்ணப்பம்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 
 
ஊதிய விகிதம்‌
 
இதில் தேர்வாகும் தேர்வர்களுக்கு ஊதியம் ரூ.18,200 முதல் 67,100 வரை அரசால் வழங்கப்படும்.  
 
இணைய வழி விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 18.08.2023 
இணைய வழி வண்ணப்பம்‌ சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.09.2023
 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
 
மொத்த காலிப் பணியிடங்கள்‌: 3,359
 
காவல்துறை
 
இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ மாவட்ட / மாநகர ஆயுதப்படை
 
ஆண்கள் - 0
பெண்கள் - 780 
மொத்தம் - 780
 
இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை) 
ஆண்கள் - 1,819 
பெண்கள் - 0
மொத்தம் - 1,819
 
சிறை மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறை 
 
இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌
ஆண்கள் - 83
பெண்கள் - 3
மொத்தம் - 86
 
தீயணைப்பு மற்றும்‌ மீட்புப் பணிகள்‌ துறை
தீயணைப்பாளர்‌ 
ஆண்கள் -  674
பெண்கள் - 0
மொத்தம் -  674
 
மொத்தம்‌: 
ஆண்கள் - 2576 
பெண்கள் -  783
மொத்தம்‌- 3359
 
ஒதுக்கீடுகள்‌:
 
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டவர்களுக்கு 10%, சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள்‌ இராணுவத்தினருக்கு 5% மற்றும்‌ ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்‌.
 
வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:
 
தற்போதுள்ள அரசு விதிகளின்‌படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்‌.
 
கல்வித்‌ தகுதி :
 
குறைந்தபட்சம்‌ பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
 
வயது வரம்பு (01.07.2023-ன்‌ படி):
 
குறைந்தபட்சம்‌ 18 வருடங்கள்‌, அதிகபட்சம்‌ 26 வருடங்கள்‌ (வயது உச்ச வரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)

தேர்வு முறை எப்படி?

* எழுத்துத் தேர்வு- 70 மதிப்பெண்கள்  (தமிழ் மொழி தகுதித் தேர்வும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதன்பிறகே எழுத்துத் தேர்வு நடைபெறும்.)
* உடல் தகுதித் தேர்வு- 24 மதிப்பெண்கள்
* சிறப்புத் தேர்வு - 6 மதிப்பெண்கள் 

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?

தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250 தொகையைச் செலுத்த வேண்டும்.  எஸ்பிஐ வங்கி இ- சலானாகவோ ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். 

மேலே குறிப்பிட்ட விவரங்களை விரிவாக அறிய: https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

பாடத்திட்டங்களுக்கான இணைப்பு

இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை), இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான நேரடி தேர்வு பாடத்திட்டங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/syllabus.pdf -என்ற இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு: https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Embed widget