Job Alert : 1,793 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மத்திய அரசு வேலை காத்திருக்கு. யாரேல்லாம் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.
மத்திய பாதுகாப்பு துறையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரேஸ்மேன் மற்றும் ஃபையர்மேன் பணியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ’ARMY ORDNANCE CORPS ‘ என்பதன் கீழ் பணிபுரிவதற்கான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பணி விவரம்:
Tradesman - 1249
Fireman - 544
மொத்த பணியிடங்கள் - 1793
பணியிட விவரம்:
கல்வித் தகுதி:
Tradesman பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாவது அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழில்துறை சார்ந்து பயிற்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Fireman பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வின் விவரம்:
ஊதிய விவரம்:
Tradesman Mate - ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை
Fireman - Level 2 ரூ. 19,900/- முதல் ரூ. 63,200/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இதற்கு உடற்தகுதி தேர்வு, திறனறிவு தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு ஆன்லைனின் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். https://www.aocrecruitment.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2023
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.aocrecruitment.gov.in/AOC-PDF/DetailedAdvertisement.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
IAF Recruitment : +2 தேர்ச்சி பெற்றவர்களா? இந்திய விமானப் படையில் வேலை; ஆள்சேர்ப்பு முகாம் விவரம்!