IIITDM Recruitment: பொறியியல் பட்டதாரியா? ரூ.75,000 மாத ஊதியம்; வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் இதோ!
IIITDM Recruitment: இந்திய தகவல் தொழில்துட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்துட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (Indian Institute of Information Technology, Design and Manufacturing) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி
கல்வித் தகுதி
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு B.E./B.Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மனிதவள மேலாண்லை, மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு மாத ஊதியமாக ரூ.75,000 வழங்கப்படும்.
ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdf3Q3edMUdsvaJVK3SGz8mQHsye4IX1NnyThPe1UPLCKyJ7g/closedform - என்ற கூகுள் ஃபாமில் தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 2024 ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் நேர்காணல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை
https://www.iiitdm.ac.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். தேவையானவற்றை பூர்த்தி செய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி - recruit@iiitdm.ac.in
தொடர்பு எண்: 044-27476300/ 6313
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி - www.iiitdm.ac.in
அறிவிப்பின் முழு விவரத்தை (Engagement of Training and Placement Officer) http://old.iiitdm.ac.in/img/Recruitment/2023/Notice%20for%20Training%20and%20placement%20officer%20%2020%20Dec%202023.pdf - என்ற லிங்கில் காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.01.2024
சென்னை, பாடியிலுள்ள லூகாஸ் டி.வி,எஸ். நிறுவனத்தின் உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
பாடி லூகாஸ் கிளைக்கு கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
இந்தப் பயிற்சி திட்டத்தில் 18 முதல் 45 வயது வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்சாலையில் இருந்து 10கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உதவித்தொகை
இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ப மாஹம் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
PF, ESI, Canteen, சீருடை, பாதுகாப்பு ஷூ, மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படும்.
விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு, அனைத்து சான்றிதழ்களுடன் 2 பாச்போர்ட் புகைப்படம், ஆதார் கார்டு நகல்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட்,
பாடி,
சென்னை - 600 050
தொடர்புக்கு - 7358105162 / 9
003585772
12.01.2024 வரை நேர்காணலுக்கு செல்லலாம்.
இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வேலை
கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry operator)
கல்வித் தகுதி
12-ம் வகுப்பு தேர்ச்சி . அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணினி பட்டயப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது. ரூ.11,916 மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
99,100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி - 635 115
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.01.2024
https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2022/07/2022071252.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.