மேலும் அறிய

Government JOB: 8 ஆண்டுகளில் 22 கோடிபேர் அரசு வேலைக்கு விண்ணப்பம், ஆனால் வேலை கிடைத்தது?

Government Jobs: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால், அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக குடும்பம் நம்புவதாக நம்பிக்கை நிலவுகிறது.

LIVE

Government JOB: 8 ஆண்டுகளில் 22 கோடிபேர் அரசு வேலைக்கு விண்ணப்பம், ஆனால் வேலை கிடைத்தது?

Background

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2014-2022 க்கு இடையில் 22 கோடி மக்கள்  அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர்களில் 7.22 லட்சம் பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

அரசு வேலை மோகம்:

இந்தியாவில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து தனியார் துறை வளர்ச்சியடைந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ‘

பல இந்தியர்கள் எதிர்கொள்ளும் கலாச்சார மற்றும் பொருளாதார கவலைகளை இந்தப் போக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தில் வாழ்ந்தாலும், பலர் நிரந்தரமற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு வேலை பாதுகாப்பு சிக்கலாக உள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தனியார் துறை வேலைகளை விட அரசு வேலை மிகவும் பாதுகாப்பானதாக பலர் கருதுகின்றனர்.  "குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால், அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக குடும்பம் நம்புகிறது.

வளுரும் பொருளாதாரம்:

2014 முதல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 2 டிரில்லியன் டாலரிலிருந்து 3.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது மற்றும் நடப்பு ஆண்டில் 7.2% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு, சுகாதார நலன்கள், ஓய்வூதியம் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அரசாங்கம் வழங்குகிறது, இது தனியார் வேலையில் கிடைக்காது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

ஏப்ரல்-மே பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியதற்கும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும் வேலை வாய்ப்புகள் மீதான மக்களின் அதிருப்தி ஒரு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2 கோடி வேலைவாய்ப்பு:

2017/18 முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் ( 2 கோடி ) புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று இந்த மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க தரவு காட்டுகிறது, ஆனால் தனியார் பொருளாதார வல்லுநர்கள் இதில் பெரும்பாலானவை வழக்கமான ஊதியத்துடன் முறையான பதவிகளை விட சுய வேலைவாய்ப்பு மற்றும் தற்காலிக பணியமர்த்தல் என்று கூறியுள்ளனர்.

அடுத்த வாரம் தேர்தலுக்குப் பிறகு முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் அரசாங்கம், புதிய உற்பத்திகளுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதன் மூலமும், பாதுகாப்பு போன்ற துறைகளில் உள்ளூர் கொள்முதலை ஊக்குவிப்பதன் மூலமும் வேலைவாய்ப்பைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.

"போதுமான வேலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, நல்ல ஊதியம் மற்றும் உங்களுக்கு பதவிக்காலம் மற்றும் பிற சலுகைகளை வழங்கும் போதுமான வேலைகள் இல்லை என்பதும் கூட என பெங்களூரு நகரில் உள்ள பிரேம்ஜி பல்கலைக்கழகம் உதவி பேராசிரியர் ரோசா ஆபிரகாம் தெரிவிக்கிறார்.

Also Read: 8-4-3 Rule: மாத சம்பளம் பெறுபவரா நீங்கள்? 8-4-3 விதி தெரியுமா? ரொம்ப ஈசியா ரூ.1 கோடி சம்பாதிக்கலாம் - ஐடியா இதோ..!

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget