மேலும் அறிய

Indian Bank Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா? இம்மாதம் 28-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி! முழு விவரம்!

Indian Bank Recruitment: சென்னையில் இந்தியா வங்கியின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரத்தினை இங்கே காணலாம்.

Indian Bank Recruitment:  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. கிரெடிட், நிர்வாகம், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் மேலாளர், தலைமை மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 28 -ஆம் தேதியே கடைசி நாள்.இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணி விவரம்:

  • மேலாளர்
  • தலைமை மேலாளர்
  • சீனியர் மேலாளர்

பணி இடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை அல்லது மாநிலங்களில் உள்ள மற்ற இந்தியன் வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர்.

கல்வித் தகுதி:

  • கிரெட் பிரிவில் மேலாளர் / சீனியர் மேலாளர் / தலைமை மேலாளர் பணிக்கு பட்டயக் கணக்கர் (CA / ICWA) அல்லது எம்.பி.ஏ. ஃபினான்ஸ் போன்ற சம்பந்தப்பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 7 ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • நிர்வாகம் பிரிவில் மேலாளர் / சீனியர் மேலாளர் / தலைமை மேலாளர் பணிக்கு நான்காண்டு கால பொறியியல் இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  • மார்க்கெட்டிங் பிரிவில்  மேலாளர் / சீனியர் மேலாளர் / தலைமை மேலாளர் பணிக்கு இரண்டு ஆண்டுகால மார்க்கெட்டிங் படிப்பு அல்லது PGDBA / PGDBM/ PGPM/ PGDM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது முதல் 38 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/

விண்ணப்பம் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.850  செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர் / முன்னாள் அரசு அலுவலர் உள்ளிட்டோருக்கு ரூ.175 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யிடன் செலுத்த வேண்டும். 

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:

Account Name : Engagement as Specialists in Digital Marketing, Analytics CoE
and Digitization on Contractual basis.
Account No : 7346887011
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது மட்டுமே, மூன்றாண்டு காலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் திறன் அடிப்படையில் நிரந்தர வேலை வழங்கப்படும். மேலும், பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugham Salai,

Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 28.02.2023

12 நாட்கள் கேசுவல் லீவ், 15 நாட்கள் கூடுதல் விடுப்பு, ஊதிய விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் https://www.indianbank.in/wp-content/uploads/2023/02/Detailed-advertisment-for-Recruitment-of-Specialist-Officers-2023.pdf - லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.