விமானப்படையில் சேரணுமா...? தகுதி வாய்ந்தவர்களுக்கு தாம்பரத்தில் தேர்வு முகாம்: எப்போ தெரியுமா?
இந்திய விமானப்படைக்கு தகுதியான நபர்கள் (ஆண்/பெண் இருபாலரும்) தேர்வு செய்தல் முகாம் எதிர்வரும் 02.09.2025 அன்று ஆண்களுக்கும் 05.09.2025 அன்று பெண்களுக்கும் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்: இந்திய விமானப்படைக்கு தகுதியான ஆண்கள், பெண்கள் தேர்வு செய்ய வரும் செப்.2ம் தேதி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் முகாம் நடக்கிறது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை தாம்பரம் விமான படை நிலையத்தில் இந்திய விமானப்படைக்கு தகுதியான நபர்கள் (ஆண்/பெண் இருபாலரும்) தேர்வு செய்தல் முகாம் எதிர்வரும் 02.09.2025 அன்று ஆண்களுக்கும் 05.09.2025 அன்று பெண்களுக்கும் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பங்கேற்கக்கூடிய நபருக்கு ஜனவரி 01, 2026 அன்று 172 வயதுக்கு மேற்பட்டவராகவும், 21 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு (+2) மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றும், ஆங்கிலப் பாடத்தில் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள இளைஞர்கள் "8 ASC, Air Force Station, Tambaram, Chennai 600046. Land Mark: Air Force Road, Nearest Railway Station and Bus Stand: Tambaram (East Exit)" என்ற முகவரியில் நடைபெறும் விமானப்படை ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியினை பார்வையிட வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.





















