மேலும் அறிய

India Post Recruitment 2024:10-வது தேர்ச்சி போதும்; இந்திய தபால்துறையில் வேலை, 44,228 பணியிடங்கள் - விவரம்!

India Post Office GDS Recruitment 2024: தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தபால் துறை வேலைவாய்ப்பு குறித்த விவரத்தை இங்கே காணலாம்.

இந்திய அஞ்சல் துறை 44,228 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 

பணி விவரம்:

Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக் 

  • Branch Postmaster (BPM)/Assistant Branch
  • Postmaster (ABPM)/Dak Sevaks

மொத்த காலியிடங்கள்: 44,228 பணியிடங்கள்

தமிழ்நாடு - 3,789 பணியிடங்கள்

தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், அசாம், பிஹார், சத்தீஷ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட, கர்நாடகா, கேரலா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, வட கிழக்கு மாநிலங்கள், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரபிரதேஷ், உத்தரகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. 

ஊதிய விவரம்:

 Branch Postmaster (BPM) - ரூ.12,000 - ரூ.29.380/-

Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks] -ரூ.10,000 - ரூ.24,470/-

கல்வித் தகுதி:

10-ம் வகுப்பு:

இந்த காலிப் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால்  பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தகுதி என்ன?

  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
  • சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு விவரம்:

விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://indiapostgdsonline.gov.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான https://indiapostgdsonline.gov.in/ -  சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று படி நிலைகள்,

  • ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்): முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.
  • கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம்.
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்த மாநில / மாவட்டங்களில் உள்ள எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.
  • ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் செய்தல் நிறைவு பெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024

முழு அறிவிப்பை  https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdfஎன்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.

மண்டலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிய https://indiapostgdsonline.gov.in/  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மண்டலம் வாரிய தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து 'Select Division' என்பதில் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் (மத்திய சென்னை, தென் சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி) தெரிவு செய்து விவரங்களை காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget