இந்திய அஞ்சல் துறை வேலை: 30,000 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
விண்ணப்ப கட்டணமாக பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்திய அஞ்சல் துறை என்பது நாட்டில் மிகப்பெரிய அரசு துறைகளில் ஒன்றாக உள்ளது. அஞ்சல் துறை மத்திய அரசுக்கு சொந்தமானது. மத்திய அரசுக்கு கீழ் இந்த அஞ்சல் துறை வருவதால், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் அஞ்சல் துறையில் வேலை பார்ப்பது நல்ல வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புக்காக எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புக்காக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2026 ஜனவரி மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அஞ்சல் துறையில் கிளை சாராத அஞ்சல் அலுவலங்களில் காலியாக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.
மேலும், கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GDS) அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவிக் கிளை போஸ்ட் மாஸ்ர் (ABPM), அஞ்சல் பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்படுகிறது. இதில் மொத்தம் 30,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பட்டியலின பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பழங்குடி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பில் எடுதத மதிப்பெண்களின் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்ளுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.
மேற்கண்ட அஞ்சல் துறையில் பணிக்கு விண்ணப்பிக்க indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, தொலைப்பேசி எண் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் செலுத்தலாம். எனவே, அஞ்சல் துறை வேலைக்காக காத்திருப்பவர்கள் ஜனவரி 15ஆம் தேதி தயாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





















