மேலும் அறிய

ஜூனியர் மேனேஜர் வேலை வாய்ப்பு... விண்ணப்பிக்க இன்னும் ஒரே வாரம்தான் இருக்கு: விபரம் உள்ளே!!!

பொறியியல் பட்டப்படிப்பு அல்லது எம்பிஏ முடித்தவரா நீங்கள்? சென்னையில் பாதுகாப்பு துறையின் கீழ் பணியை பெற வாய்ப்பு அமைந்துள்ளது.

ஆவடி கனரக தொழிற்சாலையில் ஜூனியர் மேனேஜர் வேலை பணியிடம் நிரப்ப இருக்காங்க. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 11-ம் தேதி. காலதாமதம் செய்யாமல் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள். 

பொறியியல் பட்டப்படிப்பு அல்லது எம்பிஏ முடித்தவரா நீங்கள்? சென்னையில் பாதுகாப்பு துறையின் கீழ் பணியை பெற வாய்ப்பு அமைந்துள்ளது. சென்னை ஆவடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராணுவ வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள ஜூனியர் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆவடியை தலைமை இடமாக கொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் (AVNL) செயல்படுகிறது. மொத்தம் 5 உற்பத்தில் யூனிட்களில் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ராணுவத்தின் T-72, T-90, MBT அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதன் கனரக வாகன தொழிற்சாலையில் Integrated Material Management பிரிவில் உள்ள 20 ஜூனியர் மேனேஜர் பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.

கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் மேனேஜர் 20

இவை பொதுப்பிரிவு - 10, ஓபிசி - 5, எஸ்சி - 3, எஸ்டி - 1, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 1 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகப்படியாக 30 வயது வரை இருக்கலாம். மத்திய அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது.

ஜூனியர் மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல்/ தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் அல்லாத ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 2 ஆண்டு எம்பிஏ முடித்திருக்க வேண்டும். ஏதெனும் ஒரு பிரிவில் எம்பிஏ தேர்ச்சி போதுமானது. இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் காரணத்தினால், விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் மூலம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் 85 சதவீதம், நேர்காணலில் 15 சதவீத மதிப்பெண்கள் என வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் 1 வருடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு குழு நிர்ணம் செய்வதே இறுதி முடிவாகும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிட்பட்டு, நேர்காணல் அழைப்பு கடிதம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ddpdoo.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.300 SBI Collect => PSU (Public Sector Undertaking) மூலம் ஆன்லைன் வழியாக நிறுவனத்தை தேர்வு செய்து செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும். விண்ணப்பித்து கவர் மீது பதவியின் பெயர் மற்றும் Post Bag No. 01 என்பதை குறிப்பிட வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை பொது மேலாளர், கனரக வாகன தொழிற்சாலை, ஆவடி, சென்னை – 600 054 (Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054)

தபால் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 11.10.2025, நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதார்களின் முழுமையான நிரப்பப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். எனவே, வயது, கல்வித்தகுதி, அனுபவம், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை முறையாக அளிக்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget