Job Fair: திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு; வரும் 27ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்..மறக்காதீங்க
திருவண்ணாமலை அருணை கல்லூரியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
சில ஆண்டுகளாகவே இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது. இதனைப் போக்க அரசு சார்பிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/மகளிர் திட்டம் சார்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
Chandrayaan 3 Landing LIVE: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்.. உடனடி அப்டேட்ஸ் இங்கே...
கல்வி தகுதி
இம்முகாமில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.. பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று. கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.