ESIC Recruitment: சென்னை ஈ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
ESIC Recruitment: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் சென்னை அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
ஈ.சி.ஜி. டெக்னீசியன்
ஜூனியர் ரேடியோகிராஃபர்
ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்
Pharmacist (Allopathic)
Pharmacist (Ayurveda)
Radiographer
மொத்த பணியிடங்கள் - 56
கல்வித் தகுதி:
- ஈ.சி.ஜி. பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். AICTE யின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும்.
- ஜூனியர் ரேடியாலஜி படிப்பிற்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ரேடியோகிராபியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, ஓ.டி. துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Pharmacist படிப்பிற்கு Pharmacy in Ayurveda துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Radiographer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாவது மற்றும் 12-வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பட்டியலின / பழங்குயின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.esic.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023
முகவரி
ESI Corporation, Panchadeep Bhawan,
143, Sterling Road, Nungambakkam,
Chennai, Tamil Nadu – 600034.
வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை காண https://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
**********
டெல்லியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Technical Research Organisation – NTRO) காலியாக உள்ள துணை இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
துணை இயக்குநர்
Analyst B
மொத்த பணியிடங்கள் - 20
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் மற்றும் 10 ஆண்டுகள் நிர்வாகம் சார்ந்த பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
Analyst - B பணியிடத்திற்கு செக்யூரிட்டி மற்றும் இண்டலிஜன்ஸ் பணியில் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
இது Deputation பதவியிடம் என்பதால் அதற்கேற்ற அரசுப் பணிக்காக தகுதி வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இதற்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Deputy Director பணியிடம்
Director (Establishment)National Technical Research Organization Block-lll,
Old JNU Campus
New Delhi – 110067
Analyst – B:
Assistant Director (R)National Technical Research Organization Block-lll,
Old JNU Campus
New Delhi -110067
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.10.2023
விண்ணப்ப படிவத்தை பதவிறக்கம் செய்ய, மேலும் தகவல்களுக்கு https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do -என்ற இணையதள முகவரியில் காணலாம்.