மேலும் அறிய

Job Alert: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.. ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை- முழு விவரம்

Job Alert: சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

சேலத்தில் உள்ள  சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

வழக்கு பணியாளர் (Case Worker)

கல்வி மற்றும் பிற தகுதிகள்

சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.

சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேலத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

வழக்கு பணியாளர் (Case Worker) - ரூ.15,000

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,

அறை எண் 126, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 

சேலம்.

தொடர்புக்கு - 0427 - 2413213

விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.10.2023

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/09/2023093020.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget