மேலும் அறிய

தனித்தேர்வர்களுக்கான முதல்நிலை தொழிற்தேர்வு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!

" தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் நெறிமுறைகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன "

2024 –ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும், அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் வகை (Category I): தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:

ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெறும் பொருட்டு தனித் தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் வகை (Category II): திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:

திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை (Category III): ஆகஸ்ட் 2018- வரை  SCVT சேர்க்கை பெற்றவர்:

ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழும (SCVT) தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

நான்காம் வகை (Category IV): 

பிற விண்ணப்பதாரர்கள்:

  1. a) விண்ணப்பதாரர் 18-09-2023 அன்று 21 வயதுபூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
  1. b) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  1. c) SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட்2019-ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த Category IV–இன்படி தனித் தேர்வராக விண்ணப்பித்து, முதன்மைத் தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு அனுமதிக்கப்படுவர். தனித் தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள I (Allied Trade)& IV (Experienced Candidates) வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 10.10.2023 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 11.10.2023 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வு descriptive type-ல் இடம்பெறும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜூலை 2024-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCEVT, புதுடெல்லி மூலம் தேசிய தொழிற்சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus),  ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம்/ பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ  
e-Challan  மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ200/- செலுத்தியமைக்கான செலுத்துச்சீட்டு (e-Challan), கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18.09.2023-க்குள் கீழ்க்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வ. எண்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

வ. எண்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

வ.
எண்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

1

கிண்டி

14

சிவகங்கை

27

தஞ்சாவூர்

2

செங்கல்பட்டு

15

தேனி

28

நீடாமங்கலம்

3

அம்பத்தூர்

16

தருமபுரி

29

திருச்சி

4

வேலூர்

17

ஓசூர்

30

அரியலூர்

5

அரக்கோணம்

18

நாமக்கல்

31

கடலூர்

6

கோவை

19

சேலம்

32

பெரம்பலூர்

7

ஈரோடு

20

நாகர்கோவில்

33

திருவண்ணாமலை

8

கரூர்

21

தென்காசி

34

உளுந்தூர்பேட்டை

9

குன்னூர்

22

திருநெல்வேலி

35

திண்டிவனம்

10

திருப்பூர்

23

தூத்துக்குடி

36.

வாணியம்பாடி

11

திண்டுக்கல்

24

விருதுநகர்

37.

ஒரகடம்

12

மதுரை

25

நாகப்பட்டினம்

 

13

பரமக்குடி

26

புதுக்கோட்டை

 

கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget