Job Alert :10-வது தேர்ச்சி பெற்றவரா? ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலை - விண்ணப்பிக்கும் முறை!
Job Alert: வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை காணவும்.
நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் (Defence Services Staff College, Wellington) பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
பன்முக உதவியாளர் (Multi Tasking Staff –
Office & Training)
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
18 முதல் 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
இந்த வேலைக்கு ரூ. 18,000 – 56,900 ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.dssc.gov.in/files/Recruitment_Six_MTS.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி -
The Commandant,
Defence Services Staff College,
Wellington (Nilgiris) – 643 231.
Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2024
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய https://www.dssc.gov.in/files/Recruitment_Six_MTS.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.