Cochin Shipyard Limited: டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களா? ஷிப்யார்டில் வேலை - உடனே விண்ணப்பிங்க!
Cochin Shipyard Limited: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெடில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை இங்கே காணலாம்.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்( Cochin Shipyard Limited (CSL) என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் திட்ட உதவியாளார் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
மெக்கானிக்கல்
எலக்ட்ரிக்கல்
எலக்ட்ரானிக்ஸ்
சிவில்
ஐ.டி.
நிதி மேலாண்மை அலுவலர்
கல்வித் தகுதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் பொறியியல் துறை என்பதால் விண்ணப்பிக்க விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்ல், ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதோடு, 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
முப்பது வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம்:
விண்ணப்பிப்பது எப்படி?
www.cochinshipyard.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்.
விண்ணபிக்க கடைசித் தேதி: 07.10.2023
தேர்வு செய்யப்படும் முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் இந்த பணிக்கு தேர்வு செய்யபடுவர்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு பொதுப் பிரிவினருக்கு ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை https://cochinshipyard.in/uploads/career/7d9d689581c5b9b43f88c06219faa1f0.pdf -/என்ற இணையதள முகவரில் காணலாம்.
விண்ணப்பிக்க https://cdn.digialm.com/EForms/configuredHtml/32530/85221/Registration.html - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
வேலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
உதவியாளர்
கணினி இயக்குபவர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCA, PGDCA, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்கத்தில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக 11,916 வழங்கப்படும். இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://Vellore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்)
வேலூர் - 632 011
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.10.2023