மேலும் அறிய

India Post Recruitment: 10ஆம் வகுப்பு போதும்; அஞ்சல் காப்பீட்டு முகவராக வாய்ப்பு; நேர்காணல் மட்டுமே- விவரம் இதோ!

India Post Recruitment 2024 அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிக்கான நேர்காணல் சென்னையில் நடைபெறுவது குறித்த தகவலை காணலாம்.

இந்திய அஞ்சல் துறையில் (India Post) ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக (Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களுக்கான (Direct Agents) வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தை காணலாம்.

பணி விவரம்:

காப்பீட்டு முகவர்கள் (சென்னை நகர மத்திய டிவிசன்)

கல்வி தகுதி: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிரிவுகள்:

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயன்படுத்த தெரிந்தவர்கள் சொந்த பகுதியில் வசிப்பவர்கள் அதை பற்றி நன்கு அறிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.  

எப்படி விண்ணப்பிப்பது?

  • விருப்பமுள்ளவர்கள் சென்னை தி.நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் 12.08.2024 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வருபவர்கள் மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு),  வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இரண்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
  • நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.
  • இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது.  
  • இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
  • முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வாடிக்கையாளர்களின் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல் தி பெஸ்ட்.!

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

 (Senior Superintendent of Pos, Chennai City Central Division )
 No. 2 Sivagnanam Salai (near Pondy Bazar),
 T.Nagar, Chennai 600 017

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 12.08.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041717 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Breaking News LIVE: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தத்தளிக்கும் தூத்துக்குடி!
Breaking News LIVE: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தத்தளிக்கும் தூத்துக்குடி!
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
Embed widget