மேலும் அறிய

Chennai Jobs: டைப்பிங் தேர்ச்சி பெற்றவரா? தகுதித்தேர்வு இல்லை; உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

Chennai Jobs: சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

இளநிலை உதவியாளர் - தட்டச்சர்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுக்காக்கும் சட்டம் 2005-ன் கீழ் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் தேர்வு செய்யப்பட உள்ளது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ரியச்சி பெற்றவராகவும் தமிழ், ஆங்கிலம் மொழியில் தட்டச்சு படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 
  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • இதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC/DC) சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் வழிமுறை:

அனைத்து சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 10.11.2023 பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு அஞ்சல் அல்லது நேரில் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட சமூகநலஅலுவலகம், சென்னை,

மாவட்டஆட்சியர்அலுவலகம் 8-வதுதளம்,

சிங்காரவேலன்மாளிகை, 

இராஜாஜிசாலை, சென்னை-01 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.11.2023 மாலை 5.00 வரை 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய  https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/11/2023110278.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

ஐ.சி.எம்.ஆர். வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆரய்ச்சி நிறுவனத்தின் கீழ்  சென்னையில் செயல்பட்டு வரும் National Institute of Epidemiology அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

தொழில்நுட்ப உதவியாளர் (குரூப் -பி, லெவல் -6)

ஆய்வக உதவியாளர் (குரூப் - சி, லெவல் -1)

கல்வித் தகுதி

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு  Statistics/ Applied Statistics/ Biostatistics உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு 10-வது படித்திருக்க வேண்டும். 50% மதிப்பெண் படித்திருக்க வேண்டும்.

நெட்வோர்க்கிங், ப்ரோகிராமர், ஆராய்ச்சி நிர்வாகம், தொடர்பியல், சமூக அறிவியல், எலக்ட்ரிக்கல், ஏர்-கன்டிசன் உள்ளிட்ட துறைகளில் பணி செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். ICMR ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு விவரம்:

ஆய்வக உதவியாளர் பணிக்கு 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தெரிவு செய்யும் முறை

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு மையம்

சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

https://nie.gov.in/ / https://main.icmr.nic.in / என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - இது தொடர்பான அறிவிப்பிற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும். 

வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம், ஊதிய விவரம் உள்ளிட்டவற்றை பற்றி கூடுதல் விவரத்திற்கு https://nie.icmr.org.in/images/pdf/careers/Technical_Recruitment_2023_-_Detailed_Advertisement.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்..

முகவரி:

Department of Health Research,
Ministry of Health and Family Welfare, Government of India,
Ayapakkam, Chennai- 600 077


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget