Chennai Jobs : டிப்ளமோ படித்தவர்களா? மாநகராட்சி சுகாதார மையங்களில் பணிபுரிய வாய்ப்பு; முழு விவரம்!
Chennai Jobs : சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவ மையங்களில் பணிபுரிய வாய்ப்பு!
சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் (Chennai city Urban Health Mission) சார்பில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவ மையங்களில் பணிபுரிய காலியாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பின் மூலம் 211 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது ஒப்பந்தம் அடிப்படையான வேலை மட்டுமே என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- Auxiliary Nurse Midwife -183
- Pharmacist - 4
- Lab Technician -19
- X - Ray Technician - 7
- Operation Theatre Assistant -5
- Ophthalmic Assistant - 3
பணியிடம்: சென்னை
கல்வித் தகுதி:
- Auxiliary Nurse Midwife பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பில் AN,m படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
- Pharmacist பணிக்கு 10+2 என்பதன் அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும். அதோடு இரண்டாண்டுகள் கொண்ட பார்மஸி துறையில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- X - Ray Technician பணிக்கு விண்ணப்பிக்க இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- ஆப்ரேசன் தியேட்டர் உதவியாளர் பணிக்கு அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தில் இரண்டு ஆண்டுகால டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- Ophthalmic Assistant பணிக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Auxiliary Nurse Midwife - ரூ.14,000
- Pharmacist - ரூ.15,000
- Lab Technician - ரூ.13,000
- X - Ray Technician - ரூ.12,000
- Operation Theatre Assistant - ரூ.8,400
- Ophthalmic Assistant - ரூ.12,000
எப்படி விண்ணப்பிப்பது?
சுய விவர குறிப்புடன், தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
கவனிக்க:
இந்தப் பணி 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலானது. நிரந்தர பணி வாய்ப்பு அல்ல.
பணி தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டும்.
தேர்தெடுக்கப்படுவர்கள் சென்னையில் செயல்படும் சுகாதார மையங்களில் பணியமர்த்தப்படுவர்.
ஒரு மாதத்திற்கு (one month notice) முன்பே அறிவிப்புடன் ஒப்பந்தம் முடித்துக்கொள்ளப்படும்.
எக்காரணமும் இன்றி ஒப்பந்தந்தை முடித்துக்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:
- சுய விவர குறிப்பு
- கல்விச் சான்றிதழ்கள்
- அனுபவ சான்றிதழ்
- Consent Letter
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2023 மாலை 5 மணி வரை
தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நேர்காணல் குறித்து தகவல் அளிக்கப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்களுக்கு அதற்கான போக்குவரத்து செலவு அதாவது Traveling Allowance மற்றும் Dearness Allowance வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://chennaicorporation.gov.in/gcc/NUHM/Advertisment%20for%20Paramedical%20Staff.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
முகவரி :
The Member Secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Department, Rippon Buildings,
Chennai - 600 003
கூடுதல் விவரங்களுக்கு 044 - 2561 9330 / 044 - 2561 9209 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
https://chennaicorporation.gov.in/gcc/ -என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெறலாம்.