தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடம்... உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க
தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச தகுதி போதும்.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச தகுதி போதும். எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் (TANCEM) உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
01.07.2025 அன்று 37 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8085-80-9685
இந்தப் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tancem.in/assets/careers/478780Notification%20and%20Application%20form%2003.09.2025%20(1).pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மேலாளர் (P&A)” M/s. தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், 5வது தளம், ஆவின் இல்லம், எண்.3A, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, நந்தனம், சென்னை – 600 035
(The Manager (P&A)” M/s. Tamil Nadu Cements Corporation Limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai – 600 035)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.09.2025





















