Jobs: உடனே அப்ளை பண்ணுங்க! வனபத்ரகாளியம்மன் கோயிலில் வேலை! 17 காலிப்பணியிடம் - இவ்ளோ சம்பளமா?
Jobs: கோவை வனபத்ர காளியம்மன் கோயிலில் காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது தேக்கம்பட்டி. இங்கு அமைந்துள்ளது வன பத்ரகாளியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோயில். இந்த கோயிலில் கிளெர்க், காவலர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 17 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. என்னென்ன காலிப்பணியிடம்? எப்படி விண்ணப்பிப்பது? என்பதை கீழே காணலாம்.
டிக்கெட் விற்பனையாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 18 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 58 ஆயிரத்து 600 வரை
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
வாட்ச்மேன்:
காலிப்பணியிடம் - 2
தகுதி - தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 15 ஆயிரத்து 900 முதல் ரூபாய் 50 ஆயிரத்து 400 வரை
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
குர்கா:
காலிப்பணியிடம் - 1
தகுதி - தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 15 ஆயிரத்து 900 முதல் ரூபாய் 50 ஆயிரத்து 400 வரை
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
எவலர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 31 ஆயிரத்து 500 வரை
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
தூய்மை பணியாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 11 ஆயிரத்து 600 முதல் ரூபாய் 36 ஆயிரத்து 800
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
திருவலகு:
காலிப்பணியிடம் - 3
தகுதி - தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 15 ஆயிரத்து 900 முதல் ரூபாய் 50 ஆயிரத்து 400 வரை
வயது வரம்பு - 18 முதல் 45
கோயிலை சுத்தம் செய்பவர்:
காலிப்பணியிடம் - 5
தகுதி - தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் - ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 31 ஆயிரத்து 500 வரை
வயது வரம்பு - 18 முதல் 45
துணை கிளெர்க் :
காலிப்பணியிடம் - 1
தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
ஓதுவர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - 3 ஆண்டுகள் ஓதுவர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். தமிழ் படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 18 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 58 ஆயிரத்து 600 வரை
வயது வரம்பு - 18 முதல் 45 வரை
கோயில் மேளக்குழு:
காலிப்பணியிடம் - 1
தகுதி - மேளம் வாசிப்பதற்கான பயிற்சி சான்றிதழ் அவசியம். தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தக்க ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலே கூறிய வேலைகளுக்கு விண்ணப்பிக்க 30 -6 -2025 ஆகிய நாளே கடைசி நாள் ஆகும். அதாவது, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.