கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் 21 பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு.. பிப்.11-க்குள் அப்ளை பண்ணுங்க..
விண்ணப்பதாரர்கள் முதலில் Short listing மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனையடுத்து தகுதிவாய்ந்தவர்கள் மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professor, Associate Professor, Assistant professor என 21 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
கொடைக்கானலில் செயல்பட்டுவரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது. மக்கள் சேவைக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா அடிக்கல் இட கடந்த 1984-ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டு. குறிப்பாக பெண்களை முன்னேற்றுவதை தம் இலக்காகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் தற்போது சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஆய்வு விரிவாக்க மையங்கள் இயங்கிவருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்ன தகுதி தேவை? என அறிந்துகொள்ளுங்கள்.
அன்னை தெரசா பல்கலைக்கழக பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் : 21
பேராசிரியர் (Professor) – 7
இணைப்பேராசிரியர் (Associate Professor) – 6
உதவிப் பேராசிரியர் (Assistant Professor) – 8
கல்வித்தகுதி:
பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.
இதோடு SET, SLET, NET ஆகிய தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருப்பது அவசியமான ஒன்று.
சம்பந்தப்பட்டத் துறைகளில் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://www.motherteresawomenuniv.ac.in/teaching/application.pdf என்ற பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து சமீபத்திய புகைப்படத்துடன் பல்கலைக்கழக முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாக வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar,
Mother Theresa Women’s University,
Kodaikannal.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/SCA பிரிவைச்சேர்ந்தவர்களுக்கு ரூ.350 மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ. 550 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short listing மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனையடுத்து தகுதிவாய்ந்தவர்கள் மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகப் பேராசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்:
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியைப்பொறுத்து மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,44,200 வரையில் வழங்கப்படும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளவும்.