மேலும் அறிய

மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் விபரம் இதோ!

சாகர் மித்ராக்கள் உள்ளூர் மீனவர்களுக்கிடையே அரசாங்கக் கொள்கைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

அரசாங்கத்திற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை  மேம்படுத்தும் விதமாக, தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள கடலோர மாவட்ட இளைஞர்கள் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் தமிழக மீன்வளத்துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற மீனவப்பிரச்சனைகளைச் சரிசெய்து வருவதில் இந்தத் துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. இந்நிலையில் அரசாங்கத்திற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக தற்போது தமிழக மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கடலோர மாவட்டத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ள நிலையில், வேறு என்ன தகுதி? தேவை என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்ளலாம்.

  • மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் விபரம் இதோ!

மீன்வளத்துறையில் சாகர் மித்ரா பணிகளுக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 600

கல்வித்தகுதி: மீன்வளத்துறையில் சாகர் மித்ரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இளங்கலை மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முடித்திருக்க வேண்டும்.  (Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology/ Information Technology (IT))

வயது வரம்பு:  35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf  என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன், உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பளம் : ரூ.10,000 + 5,000

மீன்வளத்துறையில் சாகர் மித்ராவின் பணிகள்:

மீன்வளத்துறையில் சாகர் மித்ராக்களாக நியமிக்கப்படுபவர்கள், அரசாங்கத்திற்கும் மீனவர்களுக்கும் இடைமுகமாக செயல்படுவார்கள். மேலும்  இவர்கள் மீனவர்கள் மற்றும் எந்தவொரு கடற்பரப்பிற்கும் தொடர்புக் கொள்ளும் முதல் நபராக செயல்படுகின்றனர்.

இதோடு மீன்வளம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மீனவர்களின் சேவைகள் இவர்களின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் சாகர் மித்ராக்கள் உள்ளூர் மீனவர்களுக்கிடையே அரசாங்கக் கொள்கைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். வானிலை முன்னறிவிப்பு,  பற்றிய தகவல்களைப் பரப்புவது, மீன்களை சுகாதாரமாக கையாள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

-ஸ்ரீ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Embed widget